தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வரலாறு

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புக்காக அரசாங்கத்தின் வேலைத் திணைக்களத்தின் கீழ் துணைத் திணைக்களமாக இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டில் அது உள்ளூராட்சி அமைச்சின் ஒரு பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. மிண்டும் 1970ஆம் ஆண்டுமுதல் இப் பிரிவு நீர்ப்பாசன, மின்சக்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் தனியான ஒரு திணைக்களமாக இயங்கியது. அத்துடன் 1975 சனவரி மாதம் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஒரு சபையாக ஸ்தாபிக்கப்படும்வரை அவ்விதமாகவே இருந்தது.

history
i974-12-2 ஆம் திகதிய சபையின் தொடக்க நிலைக்கூட்டத்தின்
நீர்பாசன மின்சக்தி நெடுஞ்சாலை அமைச்சர் மான்புமிகு
மைத்திரிபால சேனநாயக்கா அவர்கள்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (தே.நீ.வ.வ.ச) இலங்கையில் பாதுகாப்பான குடிநீரை விநியோகிக்கின்ற மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான வசதிகளை வழங்குகின்ற பிரதான அதிகாரசபையாகும். சபை சட்டத்தின் பிரகாரம், மிக அதிகமான உள்ளடக்கத்தையும் முன்னேற்றப்பட்ட சேவையையும் வழங்கும்பொருட்டு சபை உள்ளூராட்சி மன்றத்தினால் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதான நகர நீர் வழங்கல் திட்டங்கள் சிலவற்றைப் பொறுப்பேற்றுக்கொண்டது. நீர் மானிகளைப் பொருத்துதல் மற்றும் பட்டியல்களை விநியோகித்தல் என்பவை 1982ஆம் ஆண்டு ஆரம்பமானது. ஆழமான கிணறுகளைத் தோண்டும் வேலைத்திட்டம் உட்பட கிராமிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு வேலைத்திட்டங்களும் தே.நீ.வ.வ.சபையினால் செயற்படுத்தப்படுகின்றன.

கடந்த 36 வருடங்களில், சபை தனது செயற்பாடடு விடயப் பரப்பெல்லையை கணிசமானளவு விரிவாக்கியுள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கை 1975ஆம் ஆண்டிலிருந்த சுமார் (1000) ஆயிரத்திலிருந்து 2010ஆம் ஆண்டளவில் ஒன்பதினாயிரத்து பதின்மூன்று (9013) வரை உயர்ந்துள்ளது.

தே.நீ.வ.சபை தற்பொழுது 312 நீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. அத்துடன் அதன் மூலம் மொத்த சனத்தொகையில் 39%க்கு குடிநீர் வசதிகளை வழங்குகிறது. கைக் குழாய்களையும் குழாய் கிணறுகளையும் பயன்படுத்தி சனத்தொகையில் 12%க்கு சேவை வழங்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி இலக்கான 12% குடிநீர் உள்ளடக்கத்தை 2015ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்துகொள்வதற்காக அவ் ஆண்டில் குழாய்மார்க்க நீர் விநியோகத்தை 45.7% வரை உயர்த்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அத்துடன் கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்கள், ஹந்தான, கொக்கல, ஹிக்கடுவ, கதிர்காமம் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் சிலவற்றிலும் மலமகற்றும் முறைமைகளும் தே.நீ.வ.வ.சபையின் கீழ் இருக்கின்றன.