எமது சக்திகள்
மிக உயர்வான செயல்நோக்கமுள்ள திறமைமிக்க பணியாட் தொகுதியினர் எம்வசம் இருக்கின்றனர். தொழில்நுட்பம், நிதி, முகாமைத்துவம் மற்றும் ஏனைய விடயத்துறைகளில் பட்டப்பின் படிப்பு தகைமைகள் உள்ள சிரேஷ்ட தொழில் திறமையுள்ளவர்கள் எமது பணியாட் தொகுதியில் இருக்கின்றனர். அத்துடன் நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு துறையில் விரிவான அனுபவங்களுடன் தொழில்நுட்ப தகைமைகள் உள்ள நடுத்தர உத்தியோகத்தர்களும் எமது பணியாட் தொகுதியில் உள்ளடங்கியுள்ளனர்.
திட்டமிடல் மற்றும் நிர்மாண துறையில் நீர் வழங்கல் மற்றும் மலமகற்றும் துறையில் மிகஉயர்ந்த அனுபவம் உள்ள சிரேஷ்ட பொறியியலாளர்கள் செயற்பாடுகளைத் திட்டமிடல், குழாய் மார்க்கத்தைத் திட்டமிடல், நீர் சுத்திகரிப்பு இயந்திரகூட திட்டமிடல் மற்றும் குழாய்மூலம் நீர் செலுத்தும் கூடங்களைத் திட்டமிடுதல் போன்ற பணிகளைத் திட்டமிடுகின்றனர்.
தொழில்நுட்ப கொள்ளளவு
நாடு முழுவதிலும் 312 நீர் வழங்கல் திட்டங்களுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் செயற்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிகளை நாம் மேற்கொள்கின்றோம். நீர் குழாய் மார்க்கத்தை திட்டமிடுகின்றபோது WaterCad போன்ற மென் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. எமது பணிகளின்போது திருப்திகரமான மட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் எமது பணிகளின் வினைத்திறனை உயர்த்துவதற்கு உண்மையான பிரதேசங்களின் வலைப்பின்னல், விரிவான பிரதேச வலைப்பின்னல் மற்றும் ஏனைய வன்பொருள் மற்றும் மென்பொருள் என்பவை பயன்படுத்தப்படுகின்றன.