அறிவித்தல்
நாடளாவிய ரீதியிலான பாடசாலை போட்டிகள்
உலக நீர் தினம் – 2025
1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் , ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையானது ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் தேதியை உலக நீர் தினமாக அனுட்டிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கமைய 1993 ஆம் ஆண்டு முதல் உலக நீர் தினமானது நீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீர்வளத்தின் நிலைத்திருக்கும் முகாமைத்துவத்தினை மேம்படுத்தவேண்டும் என்பதற்கிணங்க அனுட்டிக்கப்பட்டது.
நீர் மனித உரிமையாகக் கருதப்படுகிறது. ஆனாலும் சுமார் 2.2 பில்லியன் மக்கள் உலகம் முழுவதும் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையையும், முழு சமூகங்களின் எதிர்காலத்தையும் தெளிவில்லா நிலைக்கு தள்ளுகிறது. எனவே, உலக நீர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம், தற்போதுள்ள நீர்வளத்தை பாதுகாக்கவும், நீர் மாசுபாட்டை தவிர்க்கவும், எதிர்கால நீர்வளப் பாதுகாப்பிற்கான திட்டங்களை உருவாக்குதல் தொடர்பாக்க அமைந்துள்ளது.
இந்த ஆண்டின் உலக நீர் தினமானது , நீர் மற்றும் கழிவுநீரின் நீண்டகால நிலைத்திருக்கும் முகாமை புதுமை, ஆராய்ச்சி, எண்மியமயமாதல் மற்றும் எதிர்கால சவால்களை சமாளிக்கும் திறனை மையமாகக் கொண்டுள்ளது.
தலைப்பு – “சமாதானத்துக்காக நீர்”
• கட்டுரைப் போட்டி
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனது ஆக்கங்களை சமர்ப்பிக்க முடிவதுடன், 350 சொற்களுக்கு மேற்படாத வகையில் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் பங்குபற்ற முடியும்.
• சித்திரப் போட்டி
17” x 23” அளவுள்ள தாளினை பயன்படுத்த வேண்டும். எந்தவொரு வர்ண ஊடகத்தையும் பயன்படுத்த முடியும். கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் பங்குபற்ற முடியும்.
• போட்டி நிபந்தனைகள்
தரம் 1 முதல் 8 வரை கனிஷ்ட பிரிவு எனவும் தரம் 9 மற்றும் அதற்கு மேல் சிரேஷ்ட பிரிவு எனவும் கருதப்படும் நிபுணத்துவம் பெற்ற நடுவர் குழாமின் ஊடாகவே வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும்.
• பரிசுகள் (கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி)
முதலாம் இடம் – ரூபா 10,000 மற்றும் சான்றிதழ்
இரண்டாம் இடம் – ரூபா 7,500 மற்றும் சான்றிதழ்
மூன்றாம் இடம் – ரூபா 5,000 மற்றும் சான்றிதழ்
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
• ஆக்கங்களை அனுப்புதல்
15 ஜனவரி 2025 க்கு முன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
கூட்டு தொடர்பாடல் பிரிவு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
த.பெ.இல. 14, காலி வீதி, இரத்மலானை
மேலதிக விசாரணைகளுக்கு: 011-2635254
மேலதிக விபரங்களுக்கு 9th Symposium