தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை 2020 நிதிநிலை அறிக்கைகளின்படி, அண்ணளவாக 625 பில்லியன் ரூபா சொத்து மதிப்புடன் செயற்படுகிறது. எவ்வாறாயினும், நீர் வழங்கல் வலையமைப்புக்கான உட்கட்டமைப்பு வசதிகளின் பொருட்டு முறையான காலமுறை சொத்து முகாமைத்துவம் இல்லாமையினால், வருமானமற்ற நீரின் தொடர்ச்சியான அதிகரிப்பு, பழுதுபார்த்தல் செலவுகள் மற்றும் சேவையின் தரம் குறைக்கப்பட்டன. இதனால் பாவனையாளர்களின் முறைப்பாடுகள் அதிகரித்தன.
எனவே, சொத்து நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நாடு முழுவதிலுமுள்ள பாவனையாளர்களின் விவகாரங்கள், வருமானமற்ற நீர் முகாமைத்துவம் மற்றும் நீர் உட்கட்டமைப்பு முகாமைத்துவம் ஆகியவற்றை கவனிப்பதற்காக மேலதிக பொது முகாமையாளர் (பாவனையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவம்) கீழ் பெப்ரவரி 2021இல் ஒரு பிரிவை உருவாக்கியுள்ளது.
இந்த அறிக்கை புதிதாக நிறுவப்பட்ட இப்பிரிவின் குறிப்பு விதிமுறைகளை கோடிட்டுக் காட்டுகிறது. பங்குதாரர்கள் தங்கள் சேவையை மேம்படுத்த பாவனையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவ பிரிவிலிருந்து எவ்வாறான சேவைகளை மற்றும் உதவிகளை பெறலாம் என்பது சம்பந்தமாக அறிந்துகொள்ளக்கூடிய தகவல் தொடர்பு கருவியாக செயற்படுகிறது.
பாவனையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவத்தின் கீழுள்ள பிரிவுகள்
- வருமானமற்ற நீர் கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு
- ஜி.ஐ.எஸ். மற்றும் மெப்பின் பிரிவு
- வாடிக்கையாளர் பராமரிப்பு நிலையம் (அழைப்பு நிலையம்) முகாமைத்துவ பிரிவு
- நிலப் பிரிவு
- மனிதவலு அபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு
தொடர்பு விபரங்கள்
National Water Supply & Drainage Board
Head Office, Galle Road, Ratmalana
Fax: 011-2632249
Additional General Manager
Fax: 011-2632249
Email: addlgmcam@gmail.com
Deputy General Manager (Act)
Email: wbdgmcam@gmail.com
Assistant General Manager – CAM
Fax: 011-2632249
Email: agmcam9@gmail.com
Assistant General Manager – WAM
Fax: 011-2632249
Email: upuljanaka@gmail.com
Assistant General Manager – NRW
Fax: 011-2632249
Email: suthakaranadb7@gmail.com