மேலதிக பொது முகமையாளரின் (கூட்டிணைந்த சேவைகள்) அதிகாரத்தின் கீழ் செயற்படும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, தேசிய நீர் வழங்கல் வடிகாமைப்பு சபையின் தகவல் தொழில்நுட்ப வலையமைப்பு மற்றும் தீர்வுகளுக்குப் பொறுப்பா செயற்படுகிறது. பிரதி பொது முகாமையாளர் (தகவல் தொழில்நுட்பம்) மேற்பார்வை மற்றும் அதிகாரத்தின் கீழ் இப்பிரிவு செயற்படுவதுடன், பல்வேறுபட்ட விடயப்பரப்புகளை கொண்ட இரு துறைகளின் நிமித்தம் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இரண்டு உதவி பொது முகமையாளர்களை கொண்டுள்ளது. அவையாவன உட்கட்டமைப்பு சேவைகள் மற்றும் பயன்பாட்டு மேம்பாடு ஆகும்.
நிறுவனத்தின் செயற்பாட்டு திறன், சேவைகளின் தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றாகும் என்ற உண்மையை சரியான முறையில் அங்கீகரிப்பதன் மூலம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தேவைகளுக்கேற்ப தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் தீர்வுகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தொழில்துறையின் அண்மைக்கால போக்குகளுடன் கட்டத்தை வைத்து தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை சிறந்த மற்றும் ஆரோக்கியமான நிலையில் பராமரிக்கும் அதேவேளையில், முக்கியமான வணிக தீர்வுகளின் தடையின்றி மற்றும் நம்பகமான செயற்பாட்டை உறுதிசெய்யும் அதே வேளையில், தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்துவது இப்பிரிவின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
களஞ்சியசலைகள், அலுவலக பொறுப்பாளர் அலுவலகங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற புதிய மற்றும் முக்கியமான இடங்களை உள்ளடக்கும் வகையில் IP VPN ஐ விரிவாக்குவது இந்த நடவடிக்கைகளில் சிலவாகும். பரந்த பகுதி இணைப்புக்கான செலவு குறைந்த வழிமுறையாக, ரிமோட் VPN வசதி பல புதிய இடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உதாணமாக கழிவுநீரமைப்பு அலுவலகங்கள், அலுவலக பொறுப்பாளர் அலுவலகங்கள் போன்றவை. திறன் மற்றும் செயல்திறன் நிலைகளை மேம்படுத்த புதிய சேவையகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப தீர்வு பயன்பாட்டின் அதிகரித்துவரும் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு. தற்போதுள்ள Server Room உட்கட்டமைப்பை, மெய்நிகராக்க கருத்துகளின் அடிப்படையில் மிகவும் நவீனப்படுத்தப்பட்ட, அதிநவீன உள்கட்டமைப்பு அடிப்படையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிறுவனத்திற்கு Colud Computing பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளின் ஆரம்ப மதிப்பீடு செய்யப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப பிரிவு நாட ளாவிய ரீதியிலுள்ள இடங்களில் நிறுவன அளவிலான தகவல் தொழில்நுட் தீர்வுக்கான மென்பொருள் தொகுதிகளை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள களஞ்சிய வலையமைப்பை கணினிமயமாக்குவதற்காக இருப்பு விவரப்பட்டியல் முகாமைத்துவ அமைப்பினை (IMS) செயற்படுத்துதல் , மனித வள முகாமைத்துவ வலையமைப்பின் ஊடாக மனித வள முகாமைத்துவ (HRM) பிரிவின் செயற்பாடுகளை கணினிமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. குறைந்த முன்னுரிமை மட்டத்தில் மற்ற தொகுதிகளில் செயற்படுத்தல் பணிகள் தொடர்ந்தன.
ஆவண முகாமைத்துவம், நீரின் தரக் கண்காணிப்பு, ஒன்லைன் வாடிக்கையாளர் சேவைகள், தனிநபர் கோப்பு முகாமைத்துவம், பொறியியல் வரைதல் முகாமைத்துவம் போன்ற நிறுவனத்தின் அவசர தேவைகளை கருத்திற்கொண்டு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மென்பொருள் தீர்வுகளை உருவாக்கி செயற்படுத்துவதில் ஒரு வழக்கமான நடவடிக்கையாக ஈடுபட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக தகவல் தொழில்நுட்ப பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளதை இலங்கையில் பொது நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக பொதுமக்கள் குறைகளைக் கையாள்வதற்கான அதிநவீன தீர்வை உருவாக்குதல். இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்துடன் இணைந்து பொது முகாமைத்துவ சீர்திருத்த அமைச்சின் தேவைகளுக்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தகவல் தொழில்நுட்ப பிரிவினால் இத்தீர்வு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தேசிய அளவிலான கணினிமயமாக்கல் முயற்சிகளுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பயனுள்ள பயன்பாட்டின் மூலம் அரசாங்க நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான e-Government கருத்துகளை செயற்படுத்துகிறது.
2013ஆம் ஆண்டில், தகவல் தொழில்நுட்பப் பிரிவு அழைப்பு மைய செயsfபாடுகளை ஒரு திறந்த மூல அழைப்பு முகாமைத்துவ தீர்வுமூலம் மேம்படுத்தியது, மேலும் இணைய அடிப்படையிலான ஒன்லைன் தீர்வாக ஊடாடும் குரல் பதில் (IVR), அழைப்பு பதிவு, அழைப்பு வரிசை முகாமைத்துவ, செயற்பாடு கண்காணிப்பு போன்ற வசதிகளுடன். இந்த அமைப்பு கட்டணமற்ற 1939 ஹாட்லைன் வசதியில் அழைப்பு மைய செயற்பாட்டு தளத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
2013ஆம் ஆண்டில் அதன் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டிய தகவல் தொழில்நுட்ப பிரிவு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும், நிறுவனத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையை மேம்படுத்த புதிய தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் மூத்த நிர்வாகத்திடம் பல முக்கிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது. தினசரி செயற்பாடுகளுக்கான புவியியல் தகவல் அமைப்பின் (GIS) பயன்பாடு, முகாமைத்துவ முடிவெடுக்கும் செயல்முறைக்கு விரிவான முடிவு ஆதரவு அமைப்பை பயன்படுத்துதல், ஒன்லைன் மையப்படுத்தப்பட்ட வணிக கட்டண முறையை செயற்படுத்துதல், திட்ட முகாமைத்துவம் மற்றும் முன்னேற்ற கண்காணிப்பு அமைப்பு போன்றவற்றை இது மேம்படுத்துமென உரிய நிதி கிடைக்கப்பெறும்போது எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்பு விபரங்கள்
National Water Supply & Drainage Board
Head Office, Galle Road, Ratmalana
Fax: 011-2622284
Deputy General Manager
Tel: 011-2626281
Email: dgmit@waterboard.lk
Assistant General Manager –
IT/Infrastructure services
Tel: 011-2626281
Email: agmitis@waterboard.lk
Assistant General Manager – IT/Application Development
Tel: 011-2624122
Email: agmitad@waterboard.lk