புதிய இணைப்பை பெறுவது எப்படி
விண்ணப்பப்படிவம் தரவிறக்கம்
இணையவழி விண்ணப்பம்
இணையவழி கட்டணம் செலுத்தல்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
புதிய இணைப்பை பெறுவது எப்படி
புதிய நீர் இணைப்பு
- புதிய இணைப்புக்கான விண்ணப்பப்படிவத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் அல்லது இணையவாயிலாக விண்ணப்பிக்க முடியும் அல்லது அருகிலுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அலுவலகத்தை நாடவும்.
- பூர்த்திசெய்த விண்ணப்பப் படிவத்தை அல்லது இணையவாயிலாக சமர்ப்பித்த விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களின் பிரதிகளை உங்களது பிரதேசத்திலுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
- தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொறியியாளர் அல்லது நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் அளவீடுகளை மேற்கொள்வதற்காகவும், செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்காகவும் உங்களது இடத்துக்கு விஜயம் செய்வார். கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக அதிகபட்சம் 7 நாட்கள் வரை எடுக்கும்.
- புதிய நீர் இணைப்பை வழங்குவதற்காக பாதையில் தோண்டவேண்டுமாயின் உள்ளூர்/ வீதி அதிகாரசபைக்கு அதற்கான வீதி மறுசீரமைப்பு கட்டணத்தை செலுத்த வேண்டும். செலவு மதிப்பீட்டுடன், குறித்த அதிகாரசபை மற்றும் செலுத்த வேண்டிய தொகை தொடர்பில் விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்படும்.
- இதன்பின்னர் விண்ணப்பதாரர் கட்டணத்தை செலுத்த முடியும். உள்ளூர்/ வீதி அதிகாரசபைக்குரிய கட்டணத்தை விண்ணப்பதாரர் நேரடியாக செலுத்த வேண்டும். இவ்விரண்டு கொடுப்பனவுகளையும் மேற்கொண்டதற்கான ஆதாரங்களை (தேவையான இடங்களில்) விண்ணப்பதாரர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன்டன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். (இந்த ஒப்பந்த வடிவத்தை சம்பந்தப்பட்ட பிரிவில் பார்க்கலாம்)
- உரிய பணத்தொகையை செலுத்தியதன் பின்னர் அதிகபட்சம் 4 நாட்களுக்குள் நீர் இணைப்பு வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம் தரவிறக்கம்
இணையவழி விண்ணப்பம்
இணையவழி கட்டணம் செலுத்தல்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்