கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இயங்கும் நீர் விநியோக குழாய் தும்மோதர வக்வெல்ல பாலத்திற்கு அருகாமையில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டது.
இங்கு, உடனடியாக செயற்பட்ட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது, நுகர்வோருக்கு இடையூறு ஏற்படாத வகையில், கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இயங்கும் மற்றுமொரு சமாந்தர நீர்குழாயினூடாக நீரை வழங்கி, பிரதான குழாயை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்தியது.
இது மிகவும் கடினமான செயல்திட்டமாக இருந்தது கடும் மழை, வெள்ளப்பெருக்குடன் வக்வெல்ல பாலத்திற்கு அருகாமையில் சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து சபையின் ஊழியர்களின் தொடர்ச்சியான செயற்பாட்டின் மூலம் ஒரு மாதத்திற்குள் அனைத்து திருத்தப்பணிகளும் முடிவடைந்தது.
இதற்கமைய அவ்விடத்தை கண்காணிக்க சென்ற தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் திரு.பாரதிதாசன் அவர்களினால் இப்பணியில் கடுமையாக பணியாற்றிய சபையின் அதிகாரிகள்உட்பட ஊழியர்களையும் பாராட்டியபோது.