கொழும்பின் பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை 24 மணித்தியால நீர் விநியோக துண்டிப்பு இடம்பெறவுள்ளது.

இந்நீர் விநியோக துண்டிப்பு புறக்கோட்டை, ஒல்கோட் மாவத்தை, மெயின் வீதி, காலி வீதியில் (காலி முகத்திடல் முதல் கொள்பிட்டி வரை), சிற்றம்பலம் காடினர் மாவத்தை, மலே வீதி, கொம்பனித்தெரு, லோட்டஸ் வீதி மற்றும் இவற்றின் இணைப்பு வீதிகளிலும் நீர் விநியோகம்  துண்டிக்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பேச்சாளர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதன் காரணமாக பொது மக்களுக்கு அசெளகரியங்கள் ஏற்பட முன் போதிய நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.