இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், குடிநீர் வசதிகளை வழங்குவதற்கு அப்போதைய அரசாங்கத்தினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், விசேடமாக கிராமிய நீர் வழங்கல் நடவடிக்கைகளை உள்ளுராட்சி நிறுவனங்களின் ஊடாக பிராந்திய மட்டத்தில் செயற்படுத்தப்பட்டது. பொதுவாக ஆழ்துளை கிணறுகள் மற்றும் சிறியளவிலான குழாய் நீர் வசதிகள் குறித்த காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், 1980ஆம் ஆண்டு “உலகளாவிய நீர் தசாப்தம்” பிரகடனத்தின் பிறகு, கிராமிய நீர் விநியோகத்திற்கான ஈடுபாடு ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் கிராமிய நீரை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, நாடு முழுவதும் பல திட்டங்களின் மூலம் சுமார் 4,000 சமூக முகாமைத்துவ நீர் வழங்கல் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இருப்பினும், சில திட்டங்களில், அதன் பயனுள்ள செயற்பாட்டிலும் அதன் நிலைத்தன்மையிலும் சிரமங்கள் இருப்பதை காணமுடிந்தது.
கிராமிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு (RWS) பிரிவானது தேவையான திறன்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்களுடன் முழுமையாக பணியாளர்களை கொண்டுள்ளது. இப்பிரிவு நிறுவப்பட்டதிலிருந்து பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
1980களின் நடுப்பகுதியில் இருந்து, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது கிராமிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு பிரிவுடன் தொடர்பினை பேணியதுடன், அனைத்து பிராந்திய ஆதரவு நிலையங்களிலும் கிராமிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு பிரிவுகளை நிறுவியுள்ளது.
தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் (DNCWS) சமூக முகாமைத்துவ நீர் வழங்கல் திட்டங்களை முகாமைத்துவம் செய்வதற்காக 2014இல் நிறுவப்பட்டது. கிராமிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு பிரிவினால் சமூக முகாமைத்துவ, நீர் வழங்கல் செயற்திட்டத்தை செயற்படுத்துவதற்காக பயிற்சியளித்தல் மற்றும் உரிய வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் சமூக அடிப்படையிலான அமைப்புகள் நிர்வகிக்கும் நீர் வழங்கல் திட்டங்களுக்கு தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் ஊடாக கிராமிய குழாய் நீர் வழங்கல் பிரிவுக்கு தொழில்நுட்ப ரீதியாக ஆதரவளித்துள்ளது.
இதற்கிடையில், கிராமிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு பிரிவானது ‘சிறிய நகரங்கள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் மற்றும் அரை நகர்ப்புற அல்லது சிறிய நகர நீர் வழங்கல் திட்டங்களை செயற்படுத்துவதற்கான மையமாக செயற்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக, சிறிய நகரம் மற்றும் கிராமிய நீர் வழங்கல் (ST, RWS) பிரிவின் மூலம் சிறு நகரங்கள், கிராமங்களில் நிதியுதவியுடனான குடிநீர் விநியோக திட்டங்களை தயாரிப்பதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதான திட்டத்தை ஏனைய அமைச்சுகள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் குடிநீர் விநியோக திட்டங்களுக்காக பங்களிப்புகளை வழங்கி செயற்படுத்தப்பட்டுள்ளது.
- வடக்கு மற்றும் கிழக்கு நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பட்டுத் திட்டம் (NEPWASH) – மன்னார், திருகோணமலை
- மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உலர்வலய பகுதிகளில் காலநிலை மாற்றத்திற்கேற்ப காலநிலை தாங்கும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ திட்டம் (CRIWMP)
- கல்வித் துறையுடன் இணைந்து, பாடசாலைகளுக்கான குடிநீர் வழங்கும் திட்டம்
- நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பட்டு மேம்பாட்டு திட்டத்துடன் (WaSSIP) ஒருங்கிணைந்து தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கிராமப்புறங்களில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர் விநியோகத்திற்கு உதவுதல்
தற்போது புதிய கட்டமைப்பில் தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சிறிய நகரங்கள், கிராமிய நீர் வழங்கல் பிரிவு (ST, RWS) குறைந்த பணியாளர்களுடன் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.
- குழாய் வழியை நீடிக்கும் திட்டத்தை, காலநிலைக்கு பொருந்தக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ திட்டம் (CRIWMP) மற்றும் சிறிய நகரங்கள், கிராமிய நீர் வழங்கல் பிரிவினால் சமூக அடிப்படையிலான அணுகுமுறையுடன் கூட்டாக செயற்படுத்தப்படுகிறது
- நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் உள்ளடக்க வரைபடங்களை தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தல்
- இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வட மாகாணத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குதல்
- கல்வி அமைச்சினால் வழங்கப்படும் உலக வங்கி நிதியின் கீழ் அரசாங்க பாடசாலைகளுக்கு குடிநீர் விநியோக வசதிகளை வழங்கும் பிராந்திய ஆதார நிலையத்துடன் ஒருங்கிணைத்தல்
- புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கோரிக்கையின் அடிப்படையில் விகாரைகளுக்கான குடிநீர் விநியோக வசதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப விசாரணை, வடிவமைப்புகள் தயாரித்தல், மதிப்பீடுகள் மேற்கொள்தல்.
- பாடசாலைகள், வழிபாட்டுத்தளங்கள், அரச நிறுவனங்களுக்கான நீர் முகாமைத்துவ திட்டம்
சிறிய நகரம் மற்றும் கிராமிய நீர் வழங்கல் பிரிவானது தற்போதுள்ள கிராமிய நீர் வழங்கல் வலைமைப்புகளின் நிலைபேற்றினை உறுதிசெய்வதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடைமுறையிலுள்ள நிறுவன அமைப்பை பயன்படுத்துகின்றது.
தொடர்பு விபரங்கள்
National Water Supply & Drainage Board
Galle Road, Ratmalana
Deputy General Manager
Email: dgmrws@gmail.com