1939 Hotline

tzpf gpuptpd; gzpfs;:

புதிய நீர் இணைப்பு ஒன்றினை வழங்குவது முதல் மாதாந்த அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் மானி வாசிப்பின் அடிப்படையில் பாவனையை அடிப்படையாகக் கொண்டு கட்டணத்துடனான நீர்ப்பட்டியல் ஒன்றினை வழங்குதல், குறித்த நீர் கட்டணத்தை 30 நாட்களினுள் அறவிட்டுக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்வது வணிக பிரிவின் பிரதானமான பணியாகும். அத்துடன் இணைப்புற்றுள்ள பாவனையாளர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய வகையிலான நட்புரீதியான பாவனையாளர் சேவையை வழங்குவது வணிக பிரிவின் பொறுப்பாகும்.
தற்போது சபையினால் நேரடியாக சேவை வழங்கும் பாவனையாளர்களின் எண்ணிக்கை 3.1 மில்லியனை தாண்டியுள்ளதுடன், அது 2025 ஆம் ஆண்டு முடிவடையும் போது 3.3 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொத்த பாவனையாளர்களில் 92% வீதம் வீட்டு நீர் பாவனையாளர்களாவதுடன், 08% வீதம் வீடு அல்லாத நீர் பாவனையாளர்கள் ஆவர். வீட்டு நீர் பாவனையாளர்கள் அதன் இயல்பின் அடிப்படையில் பொதுவான வீடுகள், நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகபூர்வ விடுதிகள் என உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வீடு அல்லாத வகைப்படுத்தலில் வர்த்தக நிறுவனங்கள், அரசாங்க பாடசாலைகள், அரச அலுவலகங்கள், இராணுவ நிலையங்கள், பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள், மத வழிபாட்டுத்தளங்கள் என உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் முன்னோடி செயற்திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை முறையிலான பட்டியலிடும் முறையானது 2025 ஜனவரி மாதத்திலிருந்து நாடு பூராகவும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் வழமையாக வழங்கப்படும் நீர் பட்டியலுக்கு பதிலாக குறுந்தகவல் (SMS) மூலம் ஈ- பில் (E-Billing) ஒன்றினை அனுப்புவது தற்போது மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றது.
பாவனையாளர்களுக்கு நீர்ப்பட்டியல் ஒன்றினை செலுத்துவதற்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், நிகழ்நிலை முறையில் நீர்க்கட்டணத்தை செலுத்துவதை ஊக்குவிப்பதே 2025 ஆம் ஆண்டின் முதன்மை இலக்குகளாக கண்டறியப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக நீர்ப்பட்டியல் கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தும் பாவனையாளர்களுக்கு 1.5% கழிவினை வழங்குவதோடு 30 நாட்களில் கட்டணத்தை செலுத்தவில்லையாயின் 2.5 வீதமான மேலதிக தொகையை மாதாந்த பட்டியலுக்கு சேர்க்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

வணிக நடவடிக்கைகள் சம்பந்தமாக பொது மக்களிடம் நம்பிக்கை உருவாகக்கூடிய வகையில் உயர் தரத்திலான வணிக தீர்வுகளை பாவனையாளர்களுக்கு பெற்றுக்கொடுத்தல்.

பாவனையாளர்களுக்கான உச்ச வசதிகளை உறுதிப்படுத்தும் முழுமையான சேவையின் மூலம் மிகச் சரியான அறவிடும் முறை ஒன்றினை பேணிச் செல்லல்.

Organization Structure

தொடர்பு விபரங்கள்

வணிகப் பிரிவு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை காலி வீதி, இரத்மலானை,

தொலைபேசி இல: 011-2635997
தொலை நகல்: 011-2612568
பிரதிப் பொது முகாமையாளர் (வணிகம்)(ப.க.)

திரு. ஏகநாயக வீரசிங்ஹ

 

தொலைபேசி இல: 0112 623182
தொலை நகல்: 0112 612568
மின்னஞ்சல்:dgmcomnwsdb@gmail.com

உதவிப் பொது முகாமையாளர் (பட்டியலிடல்)
திரு. டி. டப்ளியூ. என். சுரஞ்சித்
 
தொலைபேசி இல: 0112 626533
தொலை நகல்: 0112 612568
மின்னஞ்சல்:agmbilling@waterboard.lk
 
உதவிப் பொது முகாமையாளர் (சேகரித்தல்) (ப.க.)
செல்வி. ஏ. எம். எம். சமூத்ரா கே. அபேசிங்ஹ
 
தொலைபேசி இல: 0112 623184
தொலை நகல்: 0112 612568
மின்னஞ்சல்:agmrecoveries@waterboard.lk