புதிய அரசாங்கத்தின் கீழ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராகிய கலாநிதி திரு அனுர கருணாதிலக்க அவர்கள் 2024 டிசம்பர்
வடிகாலமைப்பு சபைக்கு விஜயம் செய்த்துடன், சபையின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் சம்பந்தமாக கலந்துரையாடலில் ஈடுபட்டார். அங்கு சபையின் தலைவர் திரு. தீப்தி யு சுமனசேகர அவர்களினால் சுமார் 50 வருட காலப்பகுதியில் சபை அடைந்து கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் உகந்த சேவை சம்பந்தமாக மிக தெளிவாக விளக்கினார்.
நாடளாவிய ரீதியில் குழாய் குடிநீரின் உள்ளடக்கம், சபையின் நிதி தன்மை, நிர்மாணிக்கப்படுகின்ற செயற்திட்டங்கள், முன்மொ ழியப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் கலாநிதி திரு.
அநுர கருணாதிலக்க அவர்கள், நீர் மனித உரிமை என்றும், மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், அதற்கான பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய நிறுவனம் இச்சபை என்றும் தெரிவித்தார். மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக எதிர்பார்க்கப்படும் இலக்குகளை எட்டுவதற்கு மற்றும் சபையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான ஒவ்வொரு படிநிலையிலும் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான பின்னணியையும் ஏற்படுத்திக்கொடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். பிரதி அமைச்சர் திரு. டி.பி. சரத் அவர்கள், அமைச்சின் செயலாளர் திரு. ரஞ்சித் ஆரியரத்ன அவர்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியியலாளர் தீப்தி யு சுமனசேகர அவர்கள், பொது முகாமையாளர் பொறியியலாளர் பாரதிதாசன் அவர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள், சபையின் உயர் முகாமைத்துவ அதிகாரிகள், மேலதிகப் பொது முகாமையாளர்கள், பிரதிப் பொது முகாமையாளர்கள் உட்பட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.