நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பானது ஆரம்பத்தில், பொதுப்பணிகள் திணைக்களத்தின் உப பிரிவாக இயங்கி வந்தது. 1965ஆம் ஆண்டில் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் ஒரு பிரிவாக மாற்றம்பெற்றது. தற்போதைய சபை ஜனவரி 1975இல் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்படும் வரை, 1970 முதல் நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் ஒரு தனித் துறையாக செயற்பட்டுவந்தது.
தற்போது நீர் வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது, இலங்கையில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் துப்புரவேற்பாட்டு வசதிளை வழங்கக்கூடிய பிரதானமான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை சட்டத்தின்படி, உள்ளூராட்சி நிறுவனங்களினால் செயற்படுத்தப்படும் பல முக்கியமான நகர்ப்புற நீர் வழங்கல் திட்டங்களில் கூடுதலான உள்ளடக்கத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதற்காகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது.
தொழில்நுட்பம் மற்றும் சேவைச் சிறப்பின் மூலம் இலங்கையின் அதிஉன்னத பொது வசதிகள் நிறுவனமாக இருத்தல்
பாவனையாளர்களின் பூரண திருப்தியை உறுதிப்படுத்திக்கொண்டு குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான நிலையான தீர்வுகளை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு சேவைபுரிதல்
தலைவர்
பொது முகாமையாளர்
தலைவர்
சபை உறுப்பினர்
சபை உறுப்பினர்
சபை உறுப்பினர்
சபை உறுப்பினர்
சபை உறுப்பினர்
சபை உறுப்பினர்
கண்காணிப்பாளர்
அவதானிப்பாளர்
• மனிதவள முகாமைத்துவம்
• தொழில் உறவுகள்
• களஞ்சியம் மற்றும் சரக்கு
• திறைசேரி முகாமைத்துவம்
• நிதி கணக்கியல்
• நீர் மீளாக்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு
• நிலத்தடி நீர்
• சிறிய நகரங்கள், கிராமிய நீர் மற்றும் துப்புரவேற்பாட்டு பிரிவு
• கொள்முதல் திட்டமிடல், கண்காணிப்பு பிரிவு
• நீர் விநியோக திட்ட நிர்மாணம்
• திட்ட முகாமைத்துவம்
• ஒப்பந்த முகாமைத்துவம்
• திட்டமிடல், வடிவமைப்பு
• கூட்டிணைந்த திட்டமிடல்
• ஆய்வு, அபிவிருத்தி
• சூழல், சமூகம்
• கொள்கை மூலோபாயம்
• விநியோகம்
•வணிகம்
• தகவல் தொழில்நுட்பம்
• ஆய்வுகூடங்கள்
• இயந்திரவியல் மற்றும் மின்னியல்
• வாடிக்கையாளர் சேவை நிலையம்
• வருமானமற்ற நீர் - OW/W
• மனிதவலு அபிவிருத்தி மற்றும் பயிற்சி
• நிலம்
• GIS வரைபடவியல்
மேல் மாகாணத்தில் நீர் வழங்கல் திட்டத்தின் செயற்பாடு மற்றும் பராமரிப்பு
• மேற்கு மத்தி
• மேற்கு தெற்கு
• மேற்கு வடக்கு
நீர் வழங்கல் திட்டத்தின் செயற்பாடு மற்றும் பராமரிப்பு
• வட மாகாணம்
• வட மத்திய மாகாணம்
• திட்டப் பணிப்பாளர் – லக்கல/ வில்கமுவ
நீர் வழங்கல் திட்டம் மற்றும் கழிவுநீர் திட்டத்தின் செயற்பாடு மற்றும் பராமரிப்பு
• தென் மாகாணம்
• கிழக்கு மாகாணம்
• ஊவா மாகாணம்
நீர் வழங்கல் திட்டம் மற்றும் கழிவுநீர் திட்டத்தின் செயற்பாடு மற்றும் பராமரிப்பு
• மத்திய மகாணம்
• வடமேல் மாகாணம்
• சப்ரகமுவ மாகாணம்
பொதுப்பணித் துறையின் கீழ், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பின் நிமித்தம் துணைத் துறையாக இந்த அமைப்பு அதன் தொடக்கத்தைக் கொண்டிருந்தது. 1965 இல், இது உள்ளூராட்சி அமைச்சின் கீழ் ஒரு பிரிவாக மாறியது. 1970 முதல், நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் ஒரு தனித் துறையாக இந்தப் பிரிவு செயல்பட்டது மற்றும் தற்போதைய சபை ஜனவரி 1975 இல் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்படும் வரை இருந்தது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் தற்போது இயங்கும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையானது (NWS&DB), இலங்கையில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் துப்புரவேற்பாட்டு வசதிளை வழங்க க்கூடிய பிரதானமான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. NWSDB சட்டத்தின்படி, உள்ளூராட்சி நிறுவனங்களினால் செயற்படுத்தப்படும் பல முக்கியமான நகர்ப்புற நீர் வழங்கல் செயற்திட்டங்களை NWSDB ஆல் கூடுதலான உள்ளடக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குவதற்காகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டுகளில், சபை அதன் செயற்பாடுகளின் நோக்கத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போது நாடளாவிய ரீதியில் 334 நீர் வழங்கல் செயற்திட்டங்ளை நடைமுறைப்படுத்தி வருவதுடன், இதனுடாக மொத்த சனத்தொகையில் 50% க்கும் அதிகமான மக்களுக்கு குழாய் மூலமான நீர் விநியோகத்தை வழங்கியுள்ளது. தற்போது இச்சபையானது புதிய செயற்திட்டங்களின் ஊடாக எதிர்வரும் வருடங்களில் 2.8 மில்லியன் நீர் சேவை இணைப்புக்களை வழங்குவதையே எதிர்பார்ப்பாகக் கொண்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேங்களிலும், ஹந்தனை, கொக்கல, ஹிக்கடுவ, கதிர்காமம் மற்றும் பல்வேறு வீடமைப்பு திட்டங்களின் கழிவுநீரமைப்பு சேவை நடவடிக்கைகளையும் முன்னேடுத்துச் செல்கின்றது.
2003 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் நீர் விநியோகங்களை உள்ளடக்குவதற்காக பிராந்திய ஆதரவு மத்தியநிலையம் (கிழக்கு) ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது 71% ஆன சனத்தொகையினர் குழாய் நீர் விநியோகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர், அத்துடன் அங்கு 5% மக்களுக்கு சமூக நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் குடிநீரை விநியோகிக்கப்படுகின்றது.
பிராந்திய ஆதரவு மத்தியநிலையத்தின் (கிழக்கு) ஊடாக 340,000 நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒரு மாதத்திற்கு 5.5 Mn cum உற்பத்தி செய்யப்படுகிறது. கிழக்கின் ஒரு மாதத்திற்குரிய சராசரி பட்டியலிடலானது 181 மில்லியன் ரூபா ஆகும்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வட மத்திய பிராந்திய ஆதரவு மத்தியநிலையம் (RSC) 2003 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. தற்போதைய நிர்வாக அமைப்பின் கீழ் பிரதிப் பொது முகமையாளர் பிராந்திய ஆதரவு மத்தியநிலையத்திற்கு (RSC) க்கு தலைமை தாங்குகிறார். பிரதிப் பொது முகமையாளரின் முன்னோட்டத்தின் கீழ் உதவி பொது முகமையாளரினால் (AGM) உள்ளூர் செயற்திட்டங்களுக்குரிய திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நடவடிக்கைகள், பாரியளவிலான செயற்திட்டங்களுக்குரிய திட்டமிடல் பணிகள், நடைமுறையிலுள்ள செயற்திட்டங்களின் மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கல் நடவடிக்கைகளை செயற்படுத்துதல், நிலத்தடி நீரின் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளை அவதானித்தலும் அதனடிப்படையிலான நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் நீர் வளத்தினை முகாமைத்துவம் செய்தல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக அவதானிக்கப்படுகின்றது.
Last Updated on 5 நாட்கள் by Admin