தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் புதிய தலைவராக பொறியாளர் தீப்தி யு. சுமனசேகர அவர்கள் சுப வேளையில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியிலாளராக தனது பணி வாழ்க்கையை ஆரம்பித்த அவர், சுமார் நான்கு தசாப்தங்களாக பல்வேறு பதவிகளை வகித்து இறுதியில் பொது முகாமையாளராக இருந்து ஓய்வு பெற்றார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை 2025 ஆம் ஆண்டு அரை நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. அந்தப் பெருமையை அரை நூற்றாண்டாக முன்னெடுத்துச் சென்ற ஒரு தலை சிறந்த தொழில்சார் அதிகாரியான இவர் அப்பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல மீண்டும் தலைவராக வந்தமை சபை சமூகத்தின் பெரு மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.