இலங்கை அரசாங்கத்தின் 2023 கொள்கைக்கு அமைவாக மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார தரத்துடன்கூடிய குடிநீரிற்கான விலை உற்பத்தி செலவினை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது.
அதற்கிணங்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையில் ஒரு அலகு நீரினை உற்பத்தி செய்வதற்கான செலவு உள்ளடங்கக்கூடிய வகையில் நீர் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்வதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளதனால். 2024.07.16 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் கட்டணத் திருத்தத்திற்கு ஒத்ததாக நீர் பாவனையாளர்களாகிய மக்களுக்கு குறித்த அனுகூலத்தை வழங்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றதா என்பது சம்பந்தமாக விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றது. அந்த விபரங்களுக்கு அமைவாக தேவையான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் புதிய நீர்க்கட்டண திருத்தம் சம்பந்தமாக மக்களை அறிவூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தயவுடன் அறியத்தருகின்றேன்.